September 11, 2024

நாயினை சுட்ட பொலிஸ் அதிகாரி கைது?

நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் வளர்ப்பு நாயை இழந்து தவிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோவுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பியதையடுத்தே இக்கைது நடந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மனிதத்துவம் மிக்க சிலரில் பிரிட்டோ முக்கியமானவர்  என கூறப்படுகின்றது.
அவரது ஆசைக்குரிய நாளை அயலவரான ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொன்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.