März 31, 2023

இலங்கை கடற்படை:கொரோனா கடற்படையானது?

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்;ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய மூவர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்திய கண்காணிப்பின் கீழ் 523 பேர் உள்ளனரென அவர் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.