பருப்பு, டின் மீன் கட்டுபாட்டு விலை அகற்றம்

ஒரு கிலோ பருப்பு மற்றும் 450 கிராம் டின் மீனுக்கு விதிக்கப்பட்ட விசேட கட்டுப்பாட்டு விலை உடன் அமுலாகும் வகையில் இன்று (2) நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக பருப்புக்கு 65 ரூபாயும், டின் மீனுக்கு 100 ரூபாயுமாக கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டு விலை பின்பற்றப்பட்ட போதும் சில நாட்களில் அந்நிலை மாறி வர்த்தகர்கள் விலையை உயர்த்தி விற்று வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.