Juli 27, 2024

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத்தழிழச்சி

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளார.

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகள்

சிறீ லாங்க அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படையினரால் ஏற்படுத்தப்படும் அடக்குமுறை மற்றும் துன்பங்களுக்கு எதிராக தமிழர் தாயத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகள் மற்றும் வலுவூட்டல்களுக்காகப் போராடியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத் தழிழச்சி | Tamil Woman Wins South Korean Award

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து உயிர் தப்பியவர்.

இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இவர் திகழ்வதாக மே 18 அறக்கட்டளை கூறியுள்ளது.

சுகந்தினியின் செயற்பாடுகள் 

சுகந்தினியின் செயற்பாடுகள் மே 18இன் உணர்வுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாக தாம் நம்புவதாகவும், இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தாம் ஆதரிப்பதாக குவாங்ஜு 2024 மனித உரிமைகளுக்கான நடுவர் குழுவின் தலைவர் Song Seon-tae கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத் தழிழச்சி | Tamil Woman Wins South Korean Award

தலைவர் முதல் சக இராணுவத்தினர் வரை அவர்கள் தொடர்ந்து தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சுகந்தினி தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளார்.

நள்ளிரவில் கூட பெண்கள் பயமின்றி பாதுகாப்பாக பயணம் செய்யும் நிலை இருந்துள்ளது.

 இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பிரபல தளமான ஜோசப் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு தாம் பயங்கரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் நிர்வாணப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதே அறையில் மேலும் 11 பெண்கள் அதேபோன்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளதோடு துரதிஸ்டவசமாக அவர்களில் இருவர் இறந்துள்ளனர் என்றும் சுகந்தினி குறிப்பிட்டுள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert