Juni 16, 2024

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் முடிவு!

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன. 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நோர்வே அரசாங்கம் எதிர்வரும் 28ஆம் திகதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அரபு அமைதி திட்டத்திற்கு நோர்வே ஆதரவு அளிக்கிறது என்று நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் தெரிவித்தார்.

அதே போல் அயர்லாந்து அரசாங்கமும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இது அயர்லாந்து மற்றும் பாலஸ்தீனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று  அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறினார்.

ஸ்பெயின் அரசு எதிர்வரும் 28ஆம் திகதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

பயங்கரவாதத்திற்கு பலன் இருக்கிறது என்ற செய்தியை அயர்லாந்து மற்றும் நோர்வே அரசுகள் இந்த உலகிற்கு சொல்ல வருகின்றன இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் கூறுனார்.

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதரையும் திரும்ப பெறுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert