September 10, 2024

தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள் மே 18

தமிழின அழிப்பு நாள் மே 18

தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள்.

என்றும் மறக்க முடியாத கொடும் துயரம் மிக்க நாள்.

விடுதலை வேண்டி நின்ற தமிழினத்தை

கருவறுத்த நாள்.

உலகம் பார்த்திருக்க பாதகரால் எங்கள் இனம்

படுகொலை செய்ப்பட்ட நாள்.

கொத்துக்குண்டை கொத்தென வீசி

கொத்தாக எங்கள் இனம் மடிந்த நாள்.

ஊர் இழந்து உறவிழந்து

உடல் சிதைந்து உதிரம் வடித்த நாள்

புன்னகைத்த தேசம் பூ என்றும் பிஞ்சென்றும் பராமல் கெடியர்களால்

சிதைக்கப்பட்ட நாள்.

விடியும் ஒருநாள் என்று இருந்த

இனத்திற்க்கு இருள் சூழ்ந்த நாள்.

ஊரெங்கும் பிணங்கள்,

போக திசை தெரியாது மனங்கள்

எத்தனை எத்தனை துயரம்.

எண்ணில் அடங்கா அவலம்

இருந்தும் மறப்போமா இந்தநாளை

மறப்போமா எந்தநாளும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரகாவியமான அத்தனை மாவீர செல்வங்களுக்கும், மரணித்த எம் மக்களுக்கும் எனது வீரவணக்கமும்

அஞ்சலிகளும்.

இ. நேமி1

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert