Mai 4, 2024

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2023 மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2023 மெல்பேர்ண் நிகழ்வு

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 14 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

கொடியபோர் முடிவடைந்து 14ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்பான உறவுகளே,

எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

மெல்பேர்ணில் எதிர்வரும் 18-05-2023 வியாழக்கிழமை அன்று நினைவேந்தல் நாள் நிகழ்வு நடைபெறுகின்றது.

நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152

காலம்: 18-05-2023 Thursday from 7 pm – 8.30 pm

மேலதிக விபரங்களிற்கு 0433002619 அல்லது 0452205399 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இறுதி யுத்தகாலப்பகுதியில் பொதுமக்களை பட்டினிச் சாவிலிருந்து பாதுகாத்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட கஞ்சியை நினைவூட்டும் முகமாக, முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும்.

நினைவேந்தல் நாளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோரியா

பிற்குறிப்பு:

நீங்கள் தாயகத்திலும், தொடர்ச்சியாக புலத்திலும் சந்தித்த இனவழிப்பின் பாதிப்புகள் உங்கள் எதிர்கால சந்ததியின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்தியே நகர்கின்றது. அதனால், எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது வாழ்வும் வலியும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஏனைய சமூகங்களுக்கும் எமது துயரங்கள் சொல்லப்பட வேண்டும். அதனால், இவற்றை ஒவ்வொரு பகிர்வுகளாக பதிவு செய்து, மே 18 அன்று ஆவணமாக இதனை கொண்டுவர விரும்புகின்றோம்.

இளையோர்களின் கதைகளை, வலிகளை அதன் உண்மைத்தன்மையோடு பதிவுசெய்ய முன்வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் பதிவுகளை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதி கீழுள்ள படிவத்தின் ஊடாகவும் மின்னஞ்சல் (kaanthalbook@gmail.com) ஊடாகவும் 08-05-2023 இற்கு முன்பதாக அனுப்பி வையுங்கள்.

Please send your submissions in English or Tamil using the provided form via e-mail to kaanthalbook@gmail.com by May 8, 2023.

இவ்வண்ணம்.

தமிழ் இளையோர் அமைப்பு – அவுஸ்திரேலியா

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert