September 16, 2024

முன்னாள் இராணுவ தளபதி என்றும் பாராமல் குற்றவாளிகளை இழுத்து செல்வதுபோல் கைது செய்ப்பட்ட சரத் பொன்சேகா…!

ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

„இதுவரை மனோ“ என்னும் நூலை எழுதிவரும் மனோ கணேசன், கடந்த காலத்தில் இடம்பெற்று, வெளிவராத பல சம்பவங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றார்.

இந்நிலையில் தற்போது, சர்பொன்சேகா கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

புலிகளின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைய செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்று முன்தினம் வரை முழு நாட்டு சிங்கள மக்களாலும் தேசிய வீரன் என தோளில் சுமக்கப்பட்டு, உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என ராஜபக்ச சகோதரர்களாலே புகழப்பட்ட, போர் தளபதியை, அவர் தலைமை தாங்கிய அதே இலங்கை இராணுவ வீரர்கள், மிருகத்தை போல அடித்து இழுத்து சென்றனர்…”