September 10, 2024

இந்திய – சீன இராணுவம் திடீர் மோதல்..!! நடந்தது என்ன ??

இந்திய - சீன இராணுவம் திடீர் மோதல்..!! நடந்தது என்ன ??

இந்திய – சீன எல்லைப்புற மாநிலமொன்றில் இருநாட்டு படைகளுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து இந்தியப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலம் நாகு லா பகுதியில் அமைந்துள்ள எல்லையிலேயே இந்த திடீர் மோதல் வெடித்தது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

நேற்று சனிக்கிழமை வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்தில் வந்த சீன படையினர் இது தங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன படையினர் மாறிமாறி கற்களை வீசி தாக்கிகொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும் அதில் 4 இந்திய வீரர்களும், 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் உடனடியாக இந்திய படைகளும், சீன படைகளும் அங்கு விரைந்து சென்றதை அடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளின் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படையினர் பின்வாங்கினர்.

இந்திய-சீன படையினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் எல்லையில் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது.