September 11, 2024

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதனிடையே  இன்று 49 பேருக்கான கொவிட்-19 பரிசோதனை யாழ்.போதனாவைத்தியசாலைஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எவருக்கும் கொவிட் தொற்று இருந்திருக்கவில்லையென பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 6 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகள் – 9 பேர்.
பொது வைத்தியசாலை முல்லைத்தீவு – ஒருவர்.
பொது வைத்தியசாலை வவுனியா – 6 பேர்.
விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் – 27 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தம்புள்ளை பொது மலசல கூடத்திற்கருகில் மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மலசல கூடத்திற்கருகில் இன்று திங்கட்கிழமை இராணுவ சிப்பாய் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கலேவெல – பல்லேபொல பகுதியைச் சேர்ந்த துசார குமார ஜயசிங்க எனப்படும் இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர் ஹங்வெல்ல – கொஸ்கம பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது, பொது மலசல கூடத்திற்கு சென்று வெளியில் வந்துள்ள சிப்பாய் , திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதன்போது இங்கிருந்த இளைஞர்கள் சிலரும் , யுவதிகளும் இணைந்து அரை மணித்தியால போராட்டத்தின் மத்தியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.