வெசாக்கில் விடுதலையாகும் கைதிகள் தெரிவு

வெசாக் வாரத்தை முன்னிட்டு குற்றக்கோவை தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்ட 33 குற்றச்செயல்களுக்கு புறம்பான குற்றங்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்ய சிறைச்சாலைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பிணை செலுத்த முடியாமல் இருக்கும் சிறு குற்றங்களை புரிந்த கைதிகளையும் விடதலை செய்ய இருப்பதுடன், இன்னும் சில கைதிகளுக்கும் மன்னிப்புக்காலம் வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநாதையாகி தவிக்கும் இரு பிள்ளைகளின் தந்தை ஆனந்தசுதாகரன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு இந்த வெசாக் மூலம் மன்னிப்பு காட்டப்படுமா என்பது கேள்விக்குறியே.