November 21, 2024

தமிழினப்படுகொலை ஆவண நூல் வெளிவருகிறது!! தமிழின உணர்வாளர்களிடம் கையளிக்கப்படுகிறது நூல்!!

1915 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகச் சிங்கள பெளத்த பிக்குகளின் வழிக்காட்டலில், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் துணையோடு, சிங்கள அரசப்படைகளால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நடத்தப்பட்டுவருகிறது. ஓர் நூற்றாண்டு காலமாக மொழி இன ரீதியில் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

1948 ஆம் ஆண்டில் இருந்து 1976 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வெறும் அதிகாரப்பகிர்வை கேட்டு வந்த தமிழர்களை சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைகளும், தொடர்ச்சியான வன்முறைகளுமே தனித்தமிழீழம் எனும் தேசிய இன விடுதலைக்கான கோரிக்கையை முன்வைக்க வழிவகுத்தது.

தமிழர்களின் மீதான சிங்களத்தேசத்தின் ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் அவர்களை சுயநிர்ணைய உரிமையைக் கேட்கும் நிலைக்குத் தள்ளியது. காந்தியப் போராட்டத்தை கருவிகள் மூலமாக அடக்கியது. தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியது. தமிழ்க்குழந்தைகள் கொதிக்கும் தாரில் மூழ்கடித்துக் கொன்றது. தரப்படுத்தலின் பெயரால் தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைப் பறித்தது. படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்களின் கறியை சிங்கள கும்பல் விற்பனை செய்தது. ஆண்கள், பெண்கள் என பால் பாரபட்சமின்றி தமிழர்களை பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. இளையோரை கடத்தி, வலிந்து காணாமலாக்கியது. ஏராளமான முதியவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கியது. இடம்பெயர்ந்து தவித்த தமிழ்மக்கள் போர்முனைகளிலும், முகாம்களிலும் சிங்களப்பேரினவாத அரசப்படைகளால் பிணைக் கைதிகளைப் போல நடத்தியது. இவை யாவும் பன்னாட்டு மனிதநேய சட்டங்கள் அனைத்தை மீறப்பட்டதையே காட்டுகிறது.

நூற்றாண்டு காலமாக சிங்களப்பேரினவாத அரசு மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட, திட்டமிட்ட இன அழிப்புக் குற்றங்களை ஆதாரப்பூர்வமாக நிறுவி, சர்வதேச மக்களிடம் தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட அனைத்துலகத் தமிழர் செயலகம் தன்னாலான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பெரும் பயணத்தின் தொடக்க அடியாக தமிழ் இனப்படுகொலை ஆவணத்தை அனைத்துலகத் தமிழர் செயலகம் தொகுத்துள்ளது.

தமிழரினம் கண்ட இன அழிப்பை இன மொழி எல்லைகளைக் கடந்து அனைத்து இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியின் முதற்கட்டமாக இவ்வேலையை செயலகம் மேற்கொண்டிருக்கிறது.

தமிழீழ மக்களைக் காக்க நம்மை அறிவாயுதம் ஏந்த சொல்லி உயிராயுதமாக தன்னை ஒப்புக்கொடுத்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவு நாளான வரும் 29 ஜனவரி 2023 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் “தமிழினப்படுகொலை” ஆவண நூல் வெளியிட்டு நிகழ்விற்கு மனிதநேய மிக்க உங்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறோம்.

சிங்கள அரசப்பயங்கரவாதம் நடத்தியது ‘தமிழ் இனப்படுகொலை’ என உலக மாமன்றம் ஏற்றுக்கொள்ளும் வரை…

நீதி வெல்லும்வரை…

குரலற்றவர்களின் குரல்களாக உங்கள் குரல்களும் எங்களோடு இணைந்து எதிரொலிக்கட்டும்..!

தமிழினப் படுகொலை ஆணவ நூலானது தமிழகத்தில் உள்ள தமிழன உணர்வாளர்களிடம் நாள்தோறும் கையளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழீழ மக்களின் சார்பில் அனைத்துலக தமிழர் செயலகம் தொகுத்துள்ள ‘தமிழினப்படுகொலை’ ஆவண நூலை கையளித்து வருகிறது.

1. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன், 

2. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். தொல். திருமாவளவன்.

3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு.

4. நக்கீரன் இதழின் நிறுவன ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால்.

5. மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளரும், அரசியல் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் திருமுருகன் காந்தி. 

6. தமிழ்நாடு உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி நீதியரசர் அரிபரந்தாமன்.

7. தமிழ்நாடு உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி நீதியரசர் அரிபரந்தாமன்.

8. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினரும் தமிழீழ ஆதரவாளருமான மருத்துவர் எழிலன் நாகநாதன்.

9. திராவிடர் விடுதலைக் கழகம் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.

10. தமிழீழ அரசியல் செயல்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி.

11. மூத்த பத்திரிகையாளர் விஜய் சங்கர்.

12. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரும், முன்னாள் தமிழக நிதியமைச்சருமான சி. பொன்னையன் 

13. திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ் உணர்வாளருமான திரு.கலைப் புலி தாணுஇ

14. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான இதழியலாளர் தோழர் கனிமொழி கருணாநிதி.

ஆகியோிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல தமிழ் உணர்வாளர்களைச் சந்தித்து நுலின் பிரதிகள் வழங்கப்படவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert