தமிழர் தாயகத்தில் தரையிறங்கும் அமெரிக்க துருப்புகள்
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்துலக நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடன் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்குரிய கடன்மறுசீரமைப்பு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், நாளை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்லும் பின்னணியில், அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடற்படைக் கூட்டுப்பயிற்சியொன்றும் நாளை ஆரம்பமாகவுள்ளது.
குவாட் பொறிமுறைக்கான நகர்வு
நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அமெரிக்க வான்கலங்கள் மற்றும் கடற்கலங்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஒத்ததாக, சீனாவும் தாய்வான் மீது ஒரு ஆக்கிரமிப்பைச் செய்யக் கூடும் என்ற நிலையில், அமெரிக்கா தன் கடற்படை வலுவை தென்சீனக் கடல் மற்றும் ஆசியாவில் அதிகரிக்க திட்டமிடும் நிலையிலும், குவாட் பொறிமுறைக்கான நகர்வாகவும் அமெரிக்கா இந்தப் பயிற்சி இலங்கையில் மேற்கொள்ள தலைப்படுகிறது.