எனது உரிமையுள்ள மயானத்தில் என்னுடலை எரிப்பீர்களா ? என்று ஏங்கிய இறப்புக்கள்!
சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே.
சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்தில் உரித்துள்ள வயோதிபர்கள் இளையோரையும் ,நிர்வாகத்தையும், நீதிமன்றத்தையும் கேட்கும் கேள்வி எங்கள் உடலங்களை எமது மூத்தோர் எமது என்று காட்டிவைத்த சுடுகாடு இன்று இதை அபகரித்தோர் பல விதமான அடா வடித் தன்மையால் பிற மயானங்களில் கெஞ்சும் நிலை வந்துள்ளது இந்த வாரத்தில் இறந்தவரை இன்னோரு மயாத்தில் தகனம் ஏன் இந்த நிலை ?நீதியின் விழிப்பு எங்கே ?
இறப்பில் என்றாலும் உரித்துள்ள மயாத்தில் என்னை எரிப்பீர்களா என்று கேட்கும் நிலையாரால் புலம்பும் ஊரவர்களுக்கு சட்டம் நல்லதீர்பை வழங்கியது ஆனால் அதை கேட்காமல் மீண்டும் அடாவடியா அப்படியானால் சட்டம் என்ன செய்கின்றது என்ற கேள்வி மக்களிடம் ஒரு முறை சட்டம் தனது நீதியான செயலாக இறந்தவரை எரிக்க தன் கடமையை காவல் துறையிடமோ அல்லது ஆமியிடமோ கொடுத்து செலயாற்றாமல் இருப்பது ஏன் என்ற ஏக்கமும் ஊர்மக்களிடமும் புலம் பெயர் ஊரவர்களிடமும் உள்ளது புலத்தில் இருந்து நிதி கொடுத்து சட்ட ஒழுங்கின்படி சுற்றுச்சுவரை உயரமாக்கி சட்டத்துறைக்கு நீதியாக நடந்த மயான உரித்தாளர்கள் நீதியோடு செயாற்றுகிறார்கள் சட்டம் தன்பணியை செய்யும் என்று காத்திருக்கின்றார்கள் சட்டம் தன்னடமையை செய்யுமா?
ஈழவன்