பொதுச் சின்னமாக புளொட்டின் பித்தளை விளக்கு: வெளியேறி விக்கி மற்றும் மணி!
தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி என்பன கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சிஎன்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவதற்கான கூட்டணியை உருவாக்கும் நோக்குடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கப்படுகிறது
இதில் பொதுச் சின்னம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற நிலையில் யாருமே அறிந்திராத புளொட் அமைப்பின் தேர்தல் சின்னமான பித்தளை விளக்கை தூசிதட்டி பொதுச் சின்னமாக அறிவிக்க முயன்ற வேளையில் இன்றை கலந்துரையாடலிருந்து விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வெளியேறினர்.
தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான பொதுச் சின்னமாக புளோட்டின் பித்தளை விளக்கு பொதுச்சின்னமானால் சித்தார்த்தனே இக்கட்சிகளின் கூட்டிற்கான தலைவராவார். இக்கூட்டணியை அமைப்பதற்கு ரேலோ அமைப்பின் பேச்சாளர் சுரேன் குருசாமி பல பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.