39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்குங்கள்!
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் முதற்கட்டமாக 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இராஜாங்க அமைச்சர்களுக்கு என 340க்கும் மேற்பட்ட வாகனங்கள், எரிபொருள், சம்பளம், ஊழியர்கள், சலுகைகள் போன்றவற்றுக்கு பாரிய தொகை செலவிடப்படுகிறது.
எனவே 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்கிவிட்டால் செலவிடப்படும் அந்த தொகையை மிச்சப்படுத்த முடியும்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு இராஜாங்க அமைச்சர் கூட இல்லாமல் ஒரு வருட காலம் நாட்டை ஆட்சி செய்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் நிதி இல்லை என கூறி விளையாடுவதால் எவ்வித பயனும் இல்லை என்றார்.