10ம் திகதி வரையே போராட்டமாம்!
தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ந்த கவனயீர்ப்பு போராட்டமானது யாழ்ப்பாணத்தில் நாவற்குழி சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருகிறது
„ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னாரிலும் 2வது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமானது
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.