November 21, 2024

பாதை மாற வேண்டாம்:எச்சரிக்கை

எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது என்பதுடன் அப்பொறுப்பினை அவர்கள் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்புகின்றோம ; என சர்வ மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.   அவ்வடிப்படையிலேயே எந்த ஒரு முன்னெடுப்புக்களும் மேற்கோள்ளப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் எனவும் சர்வ மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert