யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன் , ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?npa=1&client=ca-pub-8264061514582246&output=html&h=280&adk=4011192404&adf=226233497&pi=t.aa~a.2011220270~i.12~rp.4&w=722&fwrn=4&fwrnh=100&lmt=1672785898&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் , அதனை திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்காது 31ஆம் திகதி நள்ளிரவுடன் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் புதிய முதல்வருக்கான தெரிவு மாநகர சபை கட்டளை சட்டத்தின் பிராகாரம் நடாத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் , அது தொடர்பில் ஆலோசனைகளை பெற சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் யாழ். மாநகர சபை உறுப்பினர்களை தனித்தனி கட்சி ரீதியான சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.