சிறிய குற்றங்களுக்கு சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவல்?
சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்
தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அத்தகைய சந்தேக நபர்களை, மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் என கூறினார்.
இவை தொடர்பான சட்டங்களை கொண்டுவருவதற்கு என சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.