November 21, 2024

ஹேட்ரிக் வெற்றியை பதிவு செய்தது Jaffna Kings

LPL தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Colombo Stars மற்றும் Jaffna Kingsஅணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது

இன்றைய இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Jaffna Kings அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Colombo Stars அணி சார்பாக Dinesh Chandimal அதிக பட்சமாக 49 ஓட்டங்களையும் Ravi Bopara ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

Jaffna Kings அணி சார்பாக பந்துவீச்சில் Thisara Perera, Maheesh Theekshana, Dunith Wellalage, Binura Fernando ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அவிஸ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்

அதனடிப்படையில் தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதற்கு முன் LPL போட்டிகளில் ஏற்கனவே 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert