யாழ்.பல்கலையும் களமிறங்கியது
கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஏட்டிக்குப்போட்டியாக மீனவ அமைப்புக்கள் களமிறங்கியுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகமும் களமிறங்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும், கடலட்டை பண்ணை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினால் நடத்தப்பட்டுள்ளது.
இன்று, புவியியல்துறை தலைவரும் பேராசிரியருமான அன்ரனிராஜன் தலைமையில், கருத்தரங்கு இடம்பெற்றது
கடலட்டை பண்ணை தொடர்பான, சாதக பாதக நிலைகள் மற்றும் தொடர்பான விழிப்புணர்வு, பேச்சாளராக பங்கேற்ற, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவினால் வழங்கப்பட்டது.
இதனிடையே நாளைய தினம் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு பல்வேறு சிவில் தரப்புக்களும் ஆதரவை வெளியிட்டுள்ளன.
மறுபுறம் கடலட்டை பண்ணைகளிற்கு ஆதரவாக பூநகரியில் மீனவ அமைப்புக்கள் சில ஆர்ப்பாட்டமொன்றை நேற்றைய தினம் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.