கலைத்தாலும் போகமாட்டோம்!
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல்களை தனித்து எதிர்கொள்ளவேண்டுமென்ற கோசம் தமிழரசுக்கட்சிக்குள் வலுத்துவருகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசியப் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் அறிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்
முன்னதாக, கட்சியின் மத்திய குழுவில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பேசியதாகவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் அதனை மறுத்துள்ள பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் சுமந்திரனின் யோசனையை தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கவில்லைடியன மறுதலித்துள்ளது
தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி, தமிழ் மக்களை ஓரணிப்படுத்தவே நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையே மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும், தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதென்ற விரும்பத்தகாத, துரதிஸ்டவசமான முடிவெடுத்தாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து விடுமென மக்கள் அச்சமடைய தேவையில்லை.
நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படுவோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே தேர்தல்களில் போட்டியிடுவோம்” என கட்சி தெரிவித்துள்ளது.