November 23, 2024

ரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)31வது நாளின் இதயக்குமுறல்

பிரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)
30-03-1937====04-11-2022
31வது நாளின் இதயக்குமுறல்

முத்தமிட்ட தாயே முப்பத்தோர் நாள் நகர்ததோ
உங்கள் குரல் கேட்கிறது எமது நினைவோடு
தொடமுடியாத தூரம் சென்றுவிட்ட உங்களை
கரம்கூப்பி நாங்கள் வணங்குகிறோம் அம்மா

எங்கள் மாடத்தில் ஒளிரும் எம்மணி விளக்கே
மரகதச்சிலைபோல் மங்காத ஒளிவிளக்கே
கூவிய குயிலே எமது இதயத்து குலவிளக்கே
முத்துத்துரை நேசமுத்தின் முத்தான பவளமே

எட்டுக்கால் சிம்மாசனத்துக்கு அதிபதியான முத்தே
நாம் குடிகொண்டிருந்த சின்னராஜா பவளராணியே
பாசத்தை பகிர்தளிக்கும் அன்பான எம் தாயே
எங்கள் இதயக்கோவிலும் நீதானே அம்மா

பிள்ளைகளை கோபம்கொண்டு பேசியதில்லையே
எங்கள் இதயத்தில் எப்போதும் நிரந்தரம் ஆனாயே
உடலால் மட்டும்தான் எமைபிரிந்து சென்றாயம்மா
எமது உள்ளத்தில் நிரந்தரமாக வாழுகிறாய் அம்மா

தெய்வங்ளோடு தெய்வமாக வீட்டில் ஒளிதாரும் அம்மா
கண்ணீரோடு
மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert