மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணமடைந்தார்!
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் வியாழக்கிழமை (01) அதிகாலை மரணமடைந்தார்.
சிறிது நாட்கள் சுகயீனமுற்றிருந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிருந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) களுதாவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று களுதாவளை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.