November 21, 2024

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – அமெரிக்கா

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, புரிதலை மேம்படுத்துவதற்காக சமந்தா பவர், நேற்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன பேச்சாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்தார்

இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் எவ்வாறு சாத்தியமான வழிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

இதன்போது, இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என்று சமந்தா பவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அத்துடன், சமாதானம் மற்றும் செழிப்பைப் பாதுகாக்க உதவுவதற்காக, இலங்கையுடனான தனது நீண்டகால கூட்டாண்மையை மேலும் வளர்ப்பதற்கு, உறுதியாக உள்ளது என்று அவர் உறுதியளித்ததாக, பேச்சாளர் ஜென்னிங்ஸ் கூறினார்.

கடந்த செப்டம்பரில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த சமந்தா பவர், இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வது உட்பட, அதன் சிக்கலான நெருக்கடியைத் தீர்க்க தமது அர்ப்பணிப்பை அறிவித்திருந்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert