November 21, 2024

மன்னார் புதைகுழி:பின்வாங்கிய காவல்துறை

 மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன் னெடுப்பதாயின், புதைகுழிக்கு அருகே உள்ள கடைத்தொகுதிகள் உடைக்கப்பட வேண்டும் எனவும் பிரதான வீதி மற்றும் மன்னார் தீவு பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்க்குழாய்  தோண்டப்பட வேண்டுமெனவும்கோரப்பட்டுள்ளது .

மன்னார் நீதவான் முன்னிலையில் வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் கடந்த வழக்கு விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதவானால் பொலிஸாரிடம் இன்று (30) வினவப்பட்டது.

மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன் னெடுப்பதாயின், புதைகுழிக்கு அருகே உள்ள கடைத்தொகுதிகள் உடைக்கப்பட வேண்டும் எனவும் பிரதான வீதி மற்றும் மன்னார் தீவு பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்க்குழாய்  தோண்டப்பட வேண்டுமெனவும் பொலிஸார் பதில் வழங்கினர்.

இதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கான இயலுமை தமக்கில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் பொலிஸார் கூறினர்.

எனவே, அகழ்வுப் பணிகள் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மேலதிக தவணைக் காலம் தேவைப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert