தங்கத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
என் தலைவனுக்கு… காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்…. வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும், பழைய வீரம் பேசியே தன் முகம் இழந்து தனிமுகம் தொலைத்த கூட்டத்தையும், மூட நம்பிக்கையால் முதுகெலும்பை முழைக்க விடாமல் மூடிய மூத்த கூட்டத்தையும், வீர எண்ணங்கள் விழையக் கூடாது என விறகுக் கொள்ளியால் விரட்டிய கூட்டத்தையும், இருட்டைப் பரிசளித்து பார்வை இருக்கிறதா? இல்லையா? பரிசோதிக்க இடம் தராத கூட்டத்தையும், விரட்டி அடித்து விடிய வைத்தவனே … இடி விழுந்த காளான்கள் போல் கருகிக் கிடந்த இனத்தின் கவ்விக் கிடந்த கரியை கார்த்திகையில் பிறந்து கழுவிய கரிகாலனே! உன் மௌனத்தால் மீண்டும் எல்லாம் எம்முள் நுழைகிறது. நாணல்களும் ஆலமரம் என்கின்றன; உன் அருகில் நின்றதாய் சொல்லி.. வா…. தலைவா… உன் அகவை நாளில்… சொல் … தலைவா… உன் தாள் திறக்கும் நாளை… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.