வன்னி கூட்டுப் தலையகத்தில் தரையிறங்கினார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றன.
இன்று (19) காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வவுனியாவுக்கான வருகையையடுத்து நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம் , காவல்துறையினர் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாகவும் கலக்கம் தடுக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.