November 21, 2024

ஒருபுறம் கைது:மறுபுறம் விடுதலை!

வடக்கு கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களது அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டநிலையில் மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி மன்னாரில் கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 15 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் மீனவர்களை தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்ததுடன் மீனவர்களை விடுதலை செய்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert