November 22, 2024

முப்படைகளிற்கு அள்ளிவழங்கப்படுகிறது!

இலங்கையில் தொடர்ந்தும் முப்படைகளிற்கும் கூடிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகின்றமை சிங்கள மக்களிடையேயும் சீற்றத்தை தந்துள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலேயே இந்த தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகையில் இராணுவத்திற்கு 209 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு 75 பில்லியன் ரூபாவும், விமானப்படைக்கு 66 பில்லியன் ரூபாவும்,  கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட multi-task force  படைக்கு 9.8 பில்லியன் ரூபாவும். பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபா பொலிஸாருக்கு  116 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி நிலையில் புதிய வரவு செலவுத்திட்டம் இன்றையதினம் முன் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தின் 35 வீதம் பாதுகாப்பு அமைச்சே விழுங்குகின்றது என்ற குற்றச் சாட்டின் மத்தியில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் பாதுகாப்பு அமைச்சிறகே மிக அதிக தொகை ஒதுக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert