November 25, 2024

வாங்கோ!வாங்கோ!!பேச்சுக்கு வாங்கோ!!

மீண்டும் ரணிலின் பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேற தொடங்கியுள்ள நிலையில் யார் முன்னணியில் தலைப்பாகை கட்டுவதென போட்டி பங்காளிகளிடம் மூண்டுள்ளது.

டெலோ தனித்து ஆவர்த்தனம் வாசிப்பதுடன் தனியே ரணிலை சந்திக்க திட்டமிட்டுள்ளது.இத்தனி சந்திப்பில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தமையை நினைவுகூர்ந்து அலுவல்களை நிறைவேற்ற டெலோ முற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பந்தனின் பேரில் இதுவரை தனித்து கல்லா கட்டிய சுமந்திரன் சீற்றமடைந்து டெலோவை திட்டிவருகின்றார்.

இந்நிலையில் சம்பந்தன் தலைமையில் கூட்டு சேர்ந்து பேச(?)  சுமந்திரன் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்.

எனினும் தேசியத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தங்கள் காலத்தின் பின்னர் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு தேவை என்ற சிந்தனையற்றதாக கூட்டமைப்பு உள்ளது.

 ஆயுதக் குழுக்களையும் அரசியல் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற தமிழ் இனத்தின் உரிமைகளை சர்வதேச ஜனநாயக அரசியல் முறைகளில் ஈடுபடுபட்டு பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் முடிவு தொடக்கம் இன்றுவரை  தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சனம் செய்து சிதைத்து அழிக்கும் பணிகளை நிறைவேற்றி தங்கள் சொந்த சுயலாப பரம்பரை குடும்ப அரசியல் கட்சி வளர்க்கும் நோக்குடன் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்dtd=64

இப்போது இவர்கள் அனைவரையும் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது

இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடைய இணைந்த கட்சிகளின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்திய பேரரசின் ஆதரவு துணை அனுசரணையுடன் சர்வதேச நாடுகள் அனுசரணையுடன் இலங்கை தமிழர் அரசியல் பிரச்சினை நிச்சயம் நல்லதோர் முடிவைக் காணப்போகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து தமிழர்தரப்பும் இணைந்து கொள்ள வேண்டும் தவறினால் பிரிந்து இருந்து தமிழினத்தை ஏமாற்றி சுத்துமாத்து சுயலாப அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளை தமிழ்மக்கள் கவனிக்க வேண்டிய முறையில் கவனிப்பார்கள் என தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert