ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஆறு பேரும் விடுதலை!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் உள்ளார். பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அந்தவகையில், பேரறிவாளன் வழக்கில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள், மற்ற 6 பேரின் விடுதலை வழக்கிலும் வெகுவாக உதவியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பையே முன்னுதாரணமாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோதே, மற்றவர்களும் இதே தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட 5 மாதங்கள் தாமதம் ஏற்பட்ட நிலையிலும், அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது 6 பேரின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பின் இந்த விதி, ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. மத்திய அரசோ, மாநில அரசோ, உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் அதன் அதிகார வரம்பைப் பயன்படுத்தி நேரடியாக ஆணையை நிறைவேற்றலாம் அல்லது அதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம். அந்த அதிகாரத்தின்படியே பேரறிவாளனும், அதைத் தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.