குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரே தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் இன்று விடுதலையாகியுள்ளனர்
அதேவேளை, வழக்கானது தொடர்விசாரணைகளிற்காக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் மார்ச் 2ம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‚கபோக்‘ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.
பௌத்த பிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வழிபாட்டு முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.