அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டியில அக்கரைப்பற்று அஷ்பாக் அஹ்மத் முதலிடம் பெற்றார்
அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டியில அக்கரைப்பற்று அஷ்பாக் அஹ்மத் முதலிடம் பெற்றார் அஷ்பாக்கின் ஆங்கில உரை அவருக்கு அகில இலங்கை ரீதியில் சிறந்த பேச்சாளர் பட்டத்தை வழங்கியது. All Island Best Gavel Speaker (AIBGS) 2022, Grand Finale ல் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் Island Best Speaker (Champion) ஆக தேர்வாகியுள்ளார். இப் போட்டி ஆண்டு தோறும் Gavel Conference Sri Lanka ஆல், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணிப் பாடசாலைகளிலுள்ள பேச்சு வல்லுனர்கள் போட்டியிடும் ஒரு தேசிய மட்டப் போட்டியாகும்இவர் Impromptu Speech category ல் போட்டியிட்டு இவ்வருடம் சம்பியனாகத் தேர்வாகியுள்ளார். இப்போட்டியில் விசேடம் என்னவென்றால், போட்டியாளர் எவ்விதமான முன்னேற்பாடுகளுமில்லாமல், திடீரென மேடையில் வைத்துக் கொடுக்கப்படும் தலைப்பில் தன் பேச்சாற்றலையும் மொழிப் புலமையையும் நேர முகாமைத்துவத்தையும் திறம்பட நிரூபித்து மற்ற போட்டியாளர்களை விட தொடர்ச்சியாக முன்னேற வேண்டும்.அஷ்பாக் அஹ்மத் மருத்துவ மாணவர் மட்டுமல்லாது ஒரு ஹாபிழ் என்பதும் குறிபிடத்தக்கது இவர் இர்சாத் Engineer அவர்களின் புதல்வரும் ஷரீப் மௌலவின் பேரன் என்பதும் குறிபிடத்தக்கது இவருக்கு எமது வாழ்த்துக்கள்