கந்தகாடு மீண்டும் உடைப்பு! 50 பேர் தப்பியோட்டம்!
கொரோனா பெருந்தொற்றின் பின்னராக இரண்டாவது தடவையாக பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.