யாழில் கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது !

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது சம்பவம் இன்றைய தினம் (01-11-2022) இடம்பெற்றுள்ளது.
யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீர்வேலியில் உள்ள வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
40 வயது பெண்ணும் 35 ஆணும் 20 லீட்டர் கசிப்பு, 50 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சிய உபகரணங்கள் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை மூலம் நீண்ட காலமாக இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி வியாபரம் முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சான்று பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தபட்டுள்ளனர்.