டோவர் துறைமுகப் பகுதியில் வீசப்பட்டது மூன்று பெற்றோல் குண்டுகள்!!
பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் டோவர் துறைமுகத்தில் உள்ள பிரித்தானிய எல்லைப் படையினரின் குடியேற்ற மையத்தின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிற சியற் மகிழுந்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் மூன்று பெல்ரோல் குண்டுளை வீசியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்தினத்தின் புகைப்படக் கலைஞர் பார்த்தாகக் கூறியுள்ளார்.
தீயை அணைப்பதற்காக துறைமுகத்தின் அருகாமையில் உள்ள டோவரில் உள்ள தி வயாடக்ட்டுக்கு காலை 11.22 மணிக்கு அழைப்பு வந்ததாக கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
மையத்தின் வெளிப்புறச் சுவரில் ஏற்பட்ட சிறிய தீயை ஊழியர்கள் அணைப்பதைக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
இதேநேரம் சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சம்பவம் தொடர்பான எந்த மரணத்தையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
நேற்று சனிக்கிழமையன்று 24 சிறிய படகுகளில் கிட்டத்தட்ட 990 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் இதுவரை பிரான்சில் இருந்து பயணம் செய்த புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கையை 6,395 ஆகக் கொண்டு வந்துள்ளது.
2021 இல் வந்த 28,461 பேருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை 39,430 பேர் சிறிய படகுகளில் கடந்து சென்றுள்ளனர்.