அணு ஆயுதப்படைகளின் பயிற்சிகளைப் பார்வையிட்டார் புடின்
ரஷ்யாவுக்கும் உக்ரைக்கும் இடையிலான போர் 9 வது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், எதிரிகள் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷ்ய சிறப்புப் படைகள் ஒன்றிணைந்து நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகைப் பயிற்சிகளை அந்நாட்டின் அதிபர் புடின் மெய்நிகர் வாயிலாக நேரலையில் பார்வையிட்டார்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் நீர் மூழ்கிக் கப்பல், அணு ஆயுதங்களைளக் தாங்கிச் செல்லும் பொம்பர் விமானம் மற்றும் தரையிருந்து ஏவப்படும் அணு தலைகளை தாங்கிச் செல்லும் நவீன ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டுப் கண்டம் பாயும் ஆயுதங்கள் ஆயுதங்கள் நேற்றைய தினம் பயிற்சியில் சோதிக்கப்பட்டன. இவற்றை புடினின் நேரடியாகப் பார்வையிட்டார்.h
அரசுத் தொலைக்காட்சி கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்து புதின் தமது படையினரின் சாகசங்களைப் பார்வையிடுவதை காணொளியில் ஒளிப்பரப்பாக்கியது.
ரஷ்யா தனது எல்லைகளைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறாது என்று புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தையும் அவருடைய பேச்சுகள் ஏற்படுத்தி வருகின்றன.