மரடோனாவின் 40 மீற்றர் ஓவியத்தை வரையும் கலைஞர்
உதைபந்தாட்ட உச்ச நட்சத்திரமான மறைந்த டியாகோ மரடோனாவின் 40 மீட்டர் உயர சுவரோவியத்தை ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புவெனஸ் அயர்ஸ் அருகே வரைந்து வருகிறார்.
மறைந்த உதைபந்தாட்ட சின்னமான மரடோனாவின் நினைவாக சுவரோவியத்தை உருவாக்க மாக்சிமிலியானோ பாக்னாஸ்கோ Maximiliano Bagnasco நியமிக்கப்பட்டார். மரடோனாவின் 62 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் திகதிக்குள் இந்தப் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மரடோனாவை 40 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலம் கொண்ட வீரரின் சுவரோவியத்தை ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் வரைகிறார்.
1986 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது கோலை அடித்தார். அது மரடோனா அடித்த 100வது கோல் ஆகும். மருத்து சத்திரசிகிற்சையின் பின் மரடோனா 2020 இல் காலமானார்.