November 24, 2024

யாழில் நினைவேந்தப்பட்து இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர்!

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1987 ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த கொடூர சம்பவத்தின் 35ம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

பிரதிப் பணிப்பாளர்கள்,நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். (க)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert