இருளில் உக்ரைன்!!
உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் உக்ரைனின் குடிநீர் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்கி வருகிறது.
இதில், 3 முக்கிய மின் நிலையங்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அந்நாட்டின் சில பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.
இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்:
உக்ரைனின் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது.
மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.