November 22, 2024

வெள்ளைக் கொடி விவகாரம் – எங்களை விசாரிக்க முடியாது மஹாநாமஹேவா இறுமாப்பு

ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாத காரணத்தினால், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழர்களை   கொலை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எவரையும் விசாரிக்க முடியாது என மனித உரிமை சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை  கொன்றதாகக் குற்றம் சுமத்தி பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்பட வேண்டும் என யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே  சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 யாஸ்மின் சூகாவின் முயற்சி

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே இந்நாட்டு குடிமக்களை கேள்வி கேட்கும் திறன் உள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்குமகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரை அழைத்துச் செல்ல யாஸ்மின் சூகா தயாராகி வருகிறார்.

ஆனால் அதற்கு மனித உரிமைகள் ஆணையம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்பு பேரவை ஆகியவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் யஸ்மின் சூகா இவ்வாறு கருத்து வெளியிட்டமை முற்றிலும் தவறானது என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் கூறியுள்ளார்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert