November 22, 2024

கோத்தாவிற்கு தொடர்ந்தும் தலையிடி!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டார்

அதற்காக பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறுவதில் தாமதம், இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை மீளச் செலுத்துவது தொடர்பிலும் இதன்போது கணக்காய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.

குறித்த கணக்காய்வு தொடர்பான தகவல்கள் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert