November 22, 2024

நில ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல்:சுகாஸ்,அங்கயன்!

குருந்தூர்மலையில் சத்தமின்றி நில அளவைப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி சுகாஸ் அறிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நில அளவையாளர்கள் குழுவே அளவீட்டில்  ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  வடமாகாணத்தில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் மகாவலி (L) வலயத்தின் கீழான குடியேற்றங்களை தமிழ் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து எதிர்க்கவேண்டும் என அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் இனப் பரம்பலை மாற்றுவதற்கு ஏற்கனவே திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குகிளாய் ,கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அமைச்சின் கீழ் ( L) வலயமாகப் பிரகடனப்படுத்தி குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் தமிழ் மக்களின் பாராளுமன்றம் பிரதேசபை மற்றும் உள்ளூர் ஆட்சி மன்ற பிரதிநிதித்துவங்களில் தாக்கத்தை உண்டு பண்ணும்.

குறித்த திட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் துறைசார்ந்த அமைச்சருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த உள்ளேன். ஆகவே குறித்த திட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து தமிழ் கட்சிகள் ஓரணியில் குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert