சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு?
தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகக் கூறி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியமாய் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் நிறுத்தப்படவுள்ளதாக கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சியின் அனைத்து எம்.பி களும் இன்று மாலை பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகம் நேற்று இரவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற நிலையியற் கட்டளைத் திருத்த விவாதத்தின் போது, கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர்கள் பதவிகள் தமக்கே வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் திருத்தங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக ஆளும் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வாக்கெடுப்புகள் நடத்தப்படுமாயின் ஆளும் தரப்பின் பலத்தை நிரூபிக்கும் பொருட்டே ஆளும் கட்சியின் அனைத்து எம்.பி களும் இன்று மாலை பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.