பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து
வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில்
பிரித்தானிய பிரதமர் வதிவிடத்திற்க்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையின் ஒழுங்கமைப்பில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து திலீபனவர்களுக்கான நினைவேந்தல் அகம் அமைக்கப்பட்டு வெள்ளை கறுப்பு சீருடைஅணிந்த மனித நேயப் பணியாளர்களின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடை பெற்று வருகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன் நிகழ்வு பி.ப 5 மணி வரை நடை பெற இருக்கின்றது.நினைவு வணக்க உரைகள்.பி.ப
4 மணிக்கு ஆரம்பமாகி உறுதி ஏற்புடன் நிறவைடைந்தது.