உணவுக்கு தட்டுப்பாடு:தங்கம் விலை வீழ்கின்றது!
இலங்கையில் அன்றாட உணவு பொருட்களின் விலையோ நாள் தோறும் தங்கத்தின் விலையாக மிளிர்கின்றது.
ஆனால் இலங்கையில் இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதற்கமைய 27 நாட்களுக்குள் 24 கரட் தங்கம் 8 ஆயிரத்து 500 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.இதேவேளை இந்த மாதத்தின் முதல் பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 7ஆயிரத்து 750 ரூபாவால் குறைவடைந்துள்ளது.டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே தங்கத்தின் விலை குறைவடைந்தமைக்கு காரணம் என செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைய சாத்தியம் காணப்படுவதாகவும் செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.