November 21, 2024

முல்லையில் கைதானோர் நீதிமன்றில்?

நேற்றிரவு முல்லைதீவில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்,  கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய  விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார், நேற்று மாலை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

இந் நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு  பொலிஸார் கைது செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert