திலீபன் நினைவேந்தலை குழப்ப அரசு சதி!
கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்க வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசாங்கம் குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம்” என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் திட்டமிட்டபடி தியாகி திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் எனவும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் “கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அவர் இனத்தின் அடையாளம் என்ற படியால், மக்களுக்கு சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.
அதேவேளை சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விடமாட்டார்கள். குழப்புவார்கள். ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.